திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி,டிசம்பர் 13:-

Bismi

அடுத்த ஆண்டு( 2026) துவக்கத்தில் நடைபெறவுள்ள, சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் (டிசம்பர்.13) காலையில், சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான “சத்தியமூர்த்தி பவன்” அலுவலகத்தில், 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் “செங்கோட்டை”செ.ராம்மோகனிடம், வழங்கினார். அப்போது, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி. ராபர்ட் புரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் என். அருள் பெத்தையா, காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ஏ.மகேந்திரன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், நெல்லை ராதாபுரம் சட்டமனற தொகுதி பொறுப்பாளர் விவேக் முருகன், மூத்த காங்கிரஸ் தலைவர் “நாங்குநேரி” லெனின் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்