மனநலம் பாதிக்கப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரிந்தவர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலப்பிரிவில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்ததை தொடர்ந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரிந்தவர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநலப்பிரிவில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்ததை தொடர்ந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!
வாழ்த்தி வழினுப்பி வைத்த, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

சென்னையை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது.50). இவர், மனநலம் பாதிக்கப்படட நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, வேயந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து உள்ளார்.

அப்போது, இவரைக்கண்ட நெல்லை மாநகர காவல், மேலப்பாளையம் காவல்நிலையம் போலீசார் இவரைப்பற்றி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ECRC WARD சமூக பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து,சமூக பணியாளர்கள் மனநல நோயாளி லூர்துசாமியை, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் CSR பெற்று, உடனடியாக 2025 டிசம்பர் 18- ஆம் தேதி பிற்பகலில், ECRC WARD சிகிச்சைப்பிரிவில், அனுமதித்தனர். சிகிசசை மூலம், லூர்துசாமி நல்ல உடல்நிலைக்கு திரும்பினார்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர்
நெ. சரவணன் உதவியுடன், MISSING PERSON CELL மூலமாக, லூர்துசாமியின் முகவரியை கண்டறிந்து, அவருடைய குடும்ப உறவினர்களுடன் பேசப்பட்டது. அப்போது அவர்கள், “லூர்துசாமி 3 வருடங்களுக்கு முன்னர், மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
அவரை காணவில்லை என, சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது!”- என்று, கூறினர். நெல்லையில் லூர்துசாமி இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும், நெல்லை வந்த லூர்துசாமியின் குடும்பத்தினரிடம், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN) மற்றும் மருத்துவமனை தலைவர் டாக்டர் C. ரேவதி பாலன் தலைமையில், மனநலத்துறை மருத்துவர்கள் மற்றும் ECRC பணியாளர்கள் முன்னிலையில், (பிப்ரவரி.10ம் தேதி) காலையில், முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.