வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார்- அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார்- அமைச்சர் கோவி.செழியன் பேட்டி

இந்திய நூலக அறிவியலின் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த நாளை முன்னிட்டு 133 வது தேசிய நூலகர் தின விழா பாரதிதாசன் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் உயர்கல்வித்துறையில் அமைச்சர் கோ.வி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, துணை வேந்தர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணன், சக்தி கிருஷ்ணன், பதிவாளர் காளிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் கூறும்போது..,

 

*பல்கலைக்கழக தின கூலி அடிப்படைதான பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா என்பது குறித்த கேள்விக்கு..*

 

Bismi

நிதி பற்றாக்குறை நிலவும் சூழலில் இவர்களது கோரிக்கை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய முதலமைச்சர் தமிழக முதலமைச்சர்.

 

வரையறை தந்தும் இன்னும் அதற்கும் கட்டுப்படாமல் நடக்கிற, அடம் பிடிக்கிற ஆளுநர் தமிழகத்தில் இருக்கிறார்.

 

அந்த இடர்பாடுகள் விரைவில் நீங்கும்.

 

விரைவில் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

அனைத்து கல்லூரிகளிலும் பாலியல் தொடர்பான இடர்பாடுகளை நீக்க குழு ஒரு வாரத்தில் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சம்பவங்கள் நடைபெறுவதை நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு யாரு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மாணவர்களை கண்காணிக்க பல்கலைக்கழகம் கல்லூரி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி சில இடர்பாடுகள் வரும் பொழுது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் இது போன்ற புகார் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

 

திமுக அரசு கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை தங்களின் திட்டம் என பல தலைவர்கள் தன் திட்டம் என சொல்லுவது இயற்கை, ஆனால் உலகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தாயுள்ளம் கொண்ட ஈகை மனதோடு 21 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிய திட்டத்தைக் கொண்டு வந்து தாயுமானவர் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாக மாறி இருக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்த நாடு அதைப் போற்றும் எனவே அதில் பட்டம் சூட்டிக் கொள்ள விரும்புவர்கள் உடைய சொல்லும் செயலும் பொய் என்பதை நாடு நன்கு அறியும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்