திருச்சியில் கொடி நாள் நிதி வசூலை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தேநீர் விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்து, முன்னாள் படைவீரர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் துணை இயக்குநர் லெப்.கமாண்டர் சங்கீதா(ஓய்வு), லெப்.கர்னல் வெற்றிவேல், முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.