நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்-டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்
நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்-டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்
பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ,சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார். அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை என ராமதாஸ் பேச்சு .

பா.ம.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் தொடர்ந்து பேசியதாவது:-
செயற்குழுவும் மற்றும் பொதுக்குழுவும் நேற்று முதலே களைகட்டத் தொடங்கிவிட்டது. பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.என்னிடத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒரு மணி நேரம் தேவை. நான் வளர்த்த பிள்ளைகள் தான் என்னை தூற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.என்னைப்போன்ற ஒரு தகப்பன் உலகில் வேறு யாருக்காவது உண்டா? அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்?அன்புமணி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என செல்லும் இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள்.30 ஆண்டாக மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்த ஜி.கே.மணியை அவமானப்படுத்தினால் என்னால் பொறுக்க முடியாது.நான் செய்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறேன்.நான் நினைத்திருந்தால் இந்திய அளவில் எந்த பதவியில் வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.பதவிக்கு வரமாட்டேன் என்ற எனது சத்தியத்தால் தான் நீ 36 வயதில் மத்திய அமைச்சராக ஆனாய்.
அன்புமணியின் பின்னால் 5 சதவீதம் பேர் கூட இல்லை. அவருக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.கூட்டணிக்கான காலம் இன்னும் கனியவில்லை, நான் நினைப்பது போன்ற வெற்றி தேர்தலில் கிடைக்கும்.2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பேன், நல்ல முடிவை அது கொடுக்கும்.வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்.தனது கனவில் தாய் வந்ததை நினைத்து மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். அப்போது தொண்டர்கள் அழக் கூடாது ஐயா என கூறினர். பிள்ளையை நான் சரியாக வளர்க்கவில்லை என கனவில் தாயிடம் அழுதேன். என்னை 20-30 துண்டுகளாக கூட வெட்டி வீசி இருக்கலாம், போய் சேர்ந்திருப்பேன்.சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு என்னை தினமும் காயப்படுத்துகிறார்கள். 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் தன் பக்கம் தான் இருக்கிறார்கள். அன்புமணி தன்னை நெஞ்சிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திவிட்டார். அன்புமணி நினைப்பு வந்துவிட்டால், தூக்க மாத்திரை போட்டால் கூட தூக்கம் வருவதில்லை.தைலாபுரத்தில் தினந்தோறும் என்னை வந்து சந்திக்கும் பா.ம.க.வினரை நினைத்தால் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது என்று பேசினார் .


Comments are closed.