- Advertisement -

அதிமுகவை அழிக்க முடியாது… தவெக அரசுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி!

- Advertisement -

அதிமுகவை அழிக்க முடியாது… தவெக அரசுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி!

 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் தவெக பெற்றுள்ள வெற்றி என்பது அதிகார பலத்துக்கும், பணநாயகத்துக்கும் கிடைத்த இடைக்கால வெற்றி மட்டுமே என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த இடைத்தேர்தல் தவெக தலைவர் விஜய்க்கு உண்மையான அரசியல் களத்தின் ‘மரண பயத்தை’ காட்டியுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 

​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

 

Vagai

​குதிரை பேரமும் இடைத்தேர்தல் பின்னணியும்

 

​கடந்த 2026 பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், சில கட்சிகளின் துணையுடன் தவெக மைனாரிட்டி ஆட்சி அமைத்தது. அந்த அரசை பெரும்பான்மை அரசாக மாற்றும் நோக்கில், அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் நடத்தியதன் விளைவாகவே இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள்.

 

​அதிகார துஷ்பிரயோகமும் ஜனநாயகப் படுகொலையும்

​இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியானது ஒட்டுமொத்த அமைச்சரவையையும், பண பலம் மற்றும் அதிகார பலத்தையும் களமிறக்கியது.

 

​அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டன.

 

​மாவட்டக் கழகச் செயலாளரை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததுடன், நிர்வாகிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் அரங்கேறின.

 

​தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது;

 

Bismi

காவல்துறையால் தேடப்படும் நபர்களுடன் பிரச்சாரம் செய்து ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

​தெருத் தெருவாக அலைந்த விஜய்

​”அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ என்று வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், இந்தத் தேர்தலில் வெற்றிபெற தெருத் தெருவாக அலைந்து விசில் ஊதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிமுகவை ‘தீர்ந்துபோன சக்தி’ என்றும் ‘மற்றும் பலர்’ என்றும் கேலி செய்தவர்களுக்கு, இந்த இடைத்தேர்தல் மரண பயத்தை நேரில் காட்டியிருக்கிறது.”

 

​தற்காலிக வெற்றி; அதிமுகவை அழிக்க முடியாது

 

​பொதுவாக இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே அமையும். தவெக-வின் இந்த தற்காலிக வெற்றியை வைத்து அதிமுக கோட்டையை தகர்த்துவிட்டதாக யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

 

​எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக ஒரு எஃகு கோட்டை.

 

​இது வெறும் ரீல்ஸ் மாயையில் கிடைத்த வெற்றி; “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.”

 

​பிள்ளை பிடிக்கும் கும்பல் போல சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசிப் பிடித்தே தவெக ஆட்சியில் நீடிக்கிறது.

 

​அதிமுக மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கும், களத்தில் அல்லும் பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், “அதிமுக ஓர் ஆலமரம், ஆயிரம் காலத்துப் பயிர்” என்ற ஜெயலலிதாவின் வரிகளை மேற்கோள்காட்டி, மக்கள் பணிகளில் கழகம் தொடர்ந்து முழு வீச்சில் ஈடுபடும் என உறுதிபடத் தெரிவித்தார்.

 

​#EdappadiPalaniswami #EPS #ADMK #AIADMK #TVK #Vijay #TamilNaduPolitics #ByElection #TNElection #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தவெக #விஜய் #அரசியல்செய்திகள்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்