தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி செல்வக்குமார்! விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்தார்!

 

 

நடிகர் விஜய்யின் மேனேஜர் பி.டி. செல்வக்குமார், இன்று (டிசம்பர்.17) காலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் நிறுவனர் தலைவர்

விஜய்யின் மேனேஜராக, தொடர்ந்தாற்போல் 28 வருடங்கள் பணியாற்றிய நான், ‘புலி’ திரைப்படத்தின் வருமான வரி சோதனையில் சிக்கி இருந்த போதும், எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும், விஜயிடமிருந்து சிறிதளவு கூட ஆதரவோ, தொலைபேசி அழைப்போ எதுவும் வரவில்லை!” என, குற்றம் சாட்டினார். இதனால், எதிர்காலத்திலும் விஜய் தன்னை கண்டுகொள்ளமாட்டார் என்று உணர்ந்த காரணத்தினால் தான், திமுகவில் நான் இணைய நேரிட்டது! என்று தெரிவித்தார்.

Bismi

விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நிர்வாகத்தை கொடுக்க முடியாது! என கூறிய, பி.டி. செல்வகுமார், நடிகர் விஜய், இன்னும் பக்குவப்பட வேண்டும்! என்றும், நேர்மையான மற்றும் திறமையான நிர்வாகிகளை உடன் வைத்துக்கொள்ள வேண்டும்! என்றும், வலியுறுத்தினார். குறிப்பாக, விஜய்யின் இயக்கத்தில் இருக்கும் ஒருசில பொறுப்பாளர்கள் (“புசி ஆனந்த்” போன்றோர்) பணத்தை பெற்றுக்கொண்டு, பதவிகளை வழங்குவதாகவும், அவர்கள் விஜயை தவறாக வழிநடத்தி வருவதாகவும், செல்வக்குமார், குற்றம் சாட்டினார்.

தமிழ் நாட்டில் தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, பனியன் தொழிலாளர்கள் பிரச்சனை, கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் பிரச்சனை, தூத்துக்குடி போன்ற ஊர்களில், அன்றாடம் நிகழும், சமூக பிரச்சனைகள் போன்றவற்றில், களத்தில் இறங்கி நேரில் சென்று, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்! அப்பொழுது தான், மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களை, விஜய்யால் கொண்டுவர முடியும்! இல்லையேல் மக்கள், அவருக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில், சரியான பாடம் புகட்டுவார்கள்! என்று, செல்வக்குமார் எச்சரித்தார்.

அண்மையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தாமதமாக சென்றது (கரூர் சம்பவம்) ஏன்? என்று கேள்வி எழுப்பிய செல்வக்குமார், இது போன்ற செயல்கள் மூலம் அவருடய ரசிகர்கள் தவறான பாதைக்கு செல்வதாகவும், விஜய்யை மண் குதிரை என விமர்சிப்பதாகவும், தெரிவித்தார். விஜய் தொடர்ந்து தவறான அரசியலில் ஈடுபட்டால், புதுச்சேரியை விட்டு அவர் துரத்தப்பட்டதை போலவே, தமிழகத்திலும் நடக்கும்! என்று ஆவேசமாக கூறினார்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்