தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது!

0

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு (எ) சத்தியமூர்த்தி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் செந்தில்குமார், ஞானமணி, ஒன்றிய பொறியாளர்கள் கண்ணன், அகல்யா, மற்றும் ஒன்றிய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு, எம்.களத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அறைகள் தடுத்தல் பணி, தோளூர்ப்பட்டி ஊராட்சி, பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அறைகள் தடுத்தல் பணி, நாகைநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அறைகள் தடுத்தல் பணி உள்ளிட்ட 18 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

இதில் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் மாரியாயி பேசும் பொழுது,.. நத்தம் ஊராட்சியில் கால்நடை சந்தை அமைக்க கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என ஒன்றிய துணை சேர்மன் பாபு (எ) சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், எல்.ஆர்.எஸ் சுப்ரமணியன், கோவிந்தராஜ், ரேவதி, சித்ரா, செல்வராணி, அமராவதி, வசந்த பாரதி, மல்லிகா, தீபா, முத்துலட்சுமி, மாரியாயி , பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஒன்றிய ஆணையர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்