- Advertisement -

குரூப் 4 தேர்வுக்கான மாதிரித் தேர்வு டிச.11 ஆம் தேதி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது!

0

- Advertisement -

திருச்சி மாவட்ட மைய நூலக வளாகத்தில் வரும் 11ஆம் தேதி குரூப்-4 பணியிடங்களுக்கான போட்டித்தர்வுக்கு மாதிரித் தோவு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு. தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

Bismi

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வை
திருச்சி மாவட்ட மைய நூலகம், என்ஆா் ஐஏஎஸ் அகாடமி, பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. திருச்சி மாவட்ட மைய நூலக வளாகத்தில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாதிரித் தேர்வு நடைபெறும். இதில், 6-ஆம் வகுப்பு மற்றும் 7-ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடத் திட்டங்களின் பகுதி, தொகுதி சதவீதம் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் வினாக்கள் இடம்பெறும். இந்த மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிவரை மாதிரித் தோவு நடைபெறும்.
எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த மாதிரித் தோவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்