சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி!

Bismi

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான ‘சந்தோஷ் கோப்பை கால்பந்து’ போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கியது.2025-26ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 2-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் விளை​யாடியது.ஆந்திரா மாநிலத்தின் அனந்​த​பூரில் உள்ள ஆர்​டிடி மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி 5-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. தமிழ்​நாடு அணி தரப்​பில் அலெக்​சாண்​டர் ரோமாரியோ ஜெசு​ராஜ் (45 மற்​றும் 65-வது நிமிடங்​கள்) 2 கோல்​கள் அடித்​தார். தேவதத் (21-வது நிமிடம்), நந்​தகு​மார் அனந்​த​ராஜ் (35-வது நிமிடம்), சுராஜ் குமார் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர். தமிழ்​நாடு அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது.தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6-0 என்ற கோல் கணக்​கில் அந்​த​மான் மற்​றும் நிக்​கோ​பார் தீவு​களை வீழ்த்​தி​யிருந்​தது. தனது அடுத்த ஆட்​டத்​தில் தமிழ்​நாடு அணி நாளை (டிசம்பர் 21) புதுச்​சேரி அணி​யுடன் மோதுகிறது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்