மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகம் வஞ்சிப்பு- தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகம் வஞ்சிப்பு- தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 29) திமுக எம்பிக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு:
1 -மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் .
2 -புதிய ரயில் திட்டங்களும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை” என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3 – பிரதமர் மோடி நேரில் தலையிட்டு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 – கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5 –கருணாநிதி பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்யவும் பார்லியில் குரல் எழுப்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6 – செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 –நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8- 3548.22 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா கல்வி திட்டத்தின் நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 – மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 – இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
11-பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12-கிராமப்புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Comments are closed.