தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது! 

- Advertisement -

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது!

திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, கல்லிடைக்குறிச்சி கோட்டத்தின் “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்” கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று [ஜூலை.25] காலையில், நடைபெற்றது.

- Advertisement -

கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க, கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் உள்ளிட்ட, உயர் அலுவலர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் மத்தியில், மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி பேசும் பொழுது,”மின் நுகர்வோர்களின் இல்லங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றில்,சூரிய ஒளி மின் உற்பத்தி வசதியை அமைப்பதற்கு, அரசு மானியம் மற்றும் வங்கி கடன் குறித்த விவரங்கள், சூரிய ஒளி மின் உற்பத்தி வசதியை ஏற்படுத்துவதால் ஏற்படும், மின் கட்டண குறைவு, கணக்கீடு அதன் மூலம் ஏற்படும் பொருளாதார சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் அனைத்து இடங்களுக்கும், சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும், அனைத்து மின் இணைப்புகளையும், தொடர்ச்சியாக ஆய்வு செய்து, மின்வாரிய விதிமுறைகளுக்கு முரணாக உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்தவும், விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மின் துண்டிப்பு செய்து அங்கெல்லாம் காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களிடையே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உத்தரவிட்டார்.

மேலும், நகர மக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், ( TNPDCL OFFICIAL APP ) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைத்தளங்கள்,திருநெல்வேலி மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 ஆகியவற்றின் மூலமும், மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண்ணான, 94987 94987 என்ற தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், அவர் அறிவுறுத்தினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்