- Advertisement -

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை – அவர் கலந்து கொண்டு தேவையை கேட்டு இருக்க வேண்டும் – பாஜக ஓபிசி அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார் திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….

Bismi

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பாஜக சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது. இதில் பாஜக மட்டும் அல்லாது, அனைத்து இந்தியர்களும் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பாஜக திருச்சி மாவட்ட துணை தலைவர் ஜெய கர்ணா வெளியேறியது குறித்த கேள்விக்கு ?…அவர் ஏதோ சூழ்நிலை காரணமாக வெளியே சென்று உள்ளார். மீண்டும் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பாஜகவிற்கு வரக்கூடிய நபர்களுக்கு நல்ல ஊக்கமும், அங்கீகாரமும் கிடைக்கும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக்காக அன்புமணி போராடி வருகிறார், அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. இராமலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.

Vagai

தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தது கிடையாது. காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் தமிழகம் என்ற வார்த்தையை 3 முறை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர்.
பாஜக 48 லட்சம் கோடி நிதி வழங்கி உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை, அவர் கலந்து கொண்டு தேவையை கேட்டு இருக்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக நிதி கொடுத்து கொண்டுதான் உள்ளனர். நிதி கொடுப்பவர் தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீதாராமன் அவர் எப்படி தமிழகத்தை புறக்கணிப்பார் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்