16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் தமிழகம் சாதனை -முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் தமிழகம் சாதனை -முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை, இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Bismi

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பகக்த்தில்,’வானுயர் ஜிஎஸ்டிபி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை, இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16% உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல். கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி.உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம். மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி. நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்.

தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்