- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழர் தேசம் கட்சி விலகி திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டது – தலைவர் கே கே செல்வகுமார்

- Advertisement -

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழர் தேசம் கட்சி விலகி திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டது – தலைவர் கே கே செல்வகுமார்

 

தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அவரது நிலைப்பாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழர் தேசம் கட்சி தலைவர் கேகே செல்வகுமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் ஆதரவை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில் தமிழகத்தில்

Vagai

நடைபெற இருக்கிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலன மதச்சார்பற்ற கூட்டணிக்கு தமிழர் தேசம் கட்சி தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தது.

Bismi

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால் தலை வெளியிட தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். பேட்டியின் போது அமைச்சர் மெய்யநாதன் உடன் இருந்தார்.

தமிழர் தேசம் கட்சி வருகிற 25ஆம் தேதி திருச்சி ஆலம்பட்டி புதூரில் மாநாடு நடத்த உள்ள நிலையில் தங்களது கூட்டணி முடிவை அதிரடியாக அறிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழர் தேசம் கட்சி விலகியதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் இழப்பு, வருகிற ஜனவரி 25ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக தேசம் கட்சி மாநாட்டை பார்த்தால் கட்சியின் மதிப்பு தெரியும் என்று கூறுகிறார்கள்.

தமிழர் தேசம் கட்சி திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டதால் தமிழகத்தில் பல சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்