ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:-
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:-
திருச்சி மாவட்டத்தில்,அரியமங்கலம் பகுதியில் தேசிய கட்சி ஒன்றில் மண்டல துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் ஜெயராம் பாண்டியன் என்பவர் திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர் சந்தித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் நானும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். தற்போது போர்வெல் வாகனம் வைத்து எனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறேன். மேலும் பிஜேபியின் அரியமங்கலம் மண்டல துணைத் தலைவராக உள்ளேன்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து நானும் மைதிலியும் ஒன்றாக வசித்து வந்தோம்.
இந்நிலையில் மைதிலி அவருடைய நண்பரான ராம்குமார் என்பவருடன் எனது வீட்டில் இருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு சென்னை சென்று விட்டனர். நான் சென்னை சென்று மைதிலியை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்து அவருடன் மூன்று மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தேன்.
கடந்த மாதம் 25ஆம் தேதி ராம்குமார் மற்றும் மைதிலி ஆகியோர் நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டில் இருந்த 7 லட்சம் ரூபாய் பணத்தையும் 8 பவுன் நகையையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து விசாரித்தபோது மைதிலிக்கு ஏற்கனவே பல ஆண்களுடன் திருமணம் ஆனதும் பல நபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மைதிலி மற்றும் அவரது ஆண் நண்பர் ராம்குமார் ஆகியோர் ஈடுபட்டது எனக்குத் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து என்னிடமிருந்து திருடிய பணம் மற்றும் நகையை திரும்ப பெற நேரில் சென்னை சென்று கேட்டேன்.
இதனால் மைதிலி அவரது நண்பர் ராம்குமார் இவரின் தாயார் சிவகாமி ஆகியோர் என் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மார்பில் செய்து படங்கள் அனுப்பியதாக பொய் புகார் அளித்தனர்.
மேலும் 10 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் நகையை கேட்டு மீண்டும் சென்னை வந்தால் என்னையும் என் மனைவி மற்றும் குழந்தைகளை ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார் சிவகாமி.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் நான் கடந்த மாதம் 29ஆம் தேதி பொன்மலை காவல் நிலையத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், என்னிடமிருந்து திருடி சென்ற 10 லட்சம் பணம் மட்டும் 8 பவுன் தங்க நகை மீட்டுத் தரும்படியும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.
மேலும் மைதிலி மற்றும் அவரது நண்பரான ராம்குமார் ஆகியோர் மூலம் இனி எந்த அப்பாவி ஆண்களும் ஏமாற கூடாது என்பதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தேன் என கூறினார் ஜெயராம் பாண்டியன்.