திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது அபாகஸ் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் 10 நிமிடத்தில் 100 கடினமான கணித வினாவிற்கு விடையளித்தனர்.

இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றனர். இவ்வாறு மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திரைப்பட நடிகர் திருக்குமரன் மற்றும் அபாகஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் செல்வமணி ஆகியோர் வெற்றிக்கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

- Advertisement -

இது போன்ற போட்டிகள் மாணவர்களிடம் அபாகஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றும், இன்றைய நவீன உலகில் மொபைல் வீடியோகேம் என சிறிய உலகத்திற்குள் முடங்கி உள்ள மாணவர்களை அதில் இருந்து மீட்பதற்கு அபாகஸ் ஒரு வரப்பிரசாதம் என்றும், அபாகஸ் பயிற்சி மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் தேவையற்ற பயத்தை போக்கி படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் என ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மைய நிறுவனர் செல்வமணி தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்