- Advertisement -

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்பாடுகளை, துவக்கி வைத்தார்! 

- Advertisement -

திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில், மாணவர் பேரவை செயல்பாடுகள் துவக்கம்! பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்பாடுகளை, துவக்கி வைத்தார்!

 

 

Bismi

திருநெல்வேலி பாளையங்கோட்டை ரகுமத் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக சிறப்பான முறையில் இயங்கி வரும் கலை- அறிவியல் கல்லூரி “சதக்கத்துல்லா அப்பா கல்லூரி” ஆகும். இந்த கல்லூரியில், நடப்பு [2025-26] கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்வு, அண்மையில் வாக்கெடுப்பின் மூலம் முறையாக நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவிப்பொறுப்பேற்கும் நிகழ்ச்சியும், மாணவர் பேரவையின் செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சியும், இன்று [ஜூலை.29] காலையில், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.மாணவர் பேரவை தலைவராக A.அக்ரம் கான், துணைத்தலைவராக S.பைரோஸ், செயலாளராக A.முகம்மது ஸாஜித், இணைச்செயலாளராக K.முகம்மது ரிஸ்வானா ஆகியோர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, மாணவர் பேரவையின் செயல்பாடுகளை, திருநெல்வேலி “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் “முனைவர்” U.பால சுப்பிரமணியன், துவக்கி வைத்தார். கல்லூரியின் நீண்டகால தாளாளரும், புகழ்பெற்ற தொழில் அதிபருமான T.E.S.பத்ஹூர் ரப்பாணி, கல்லூரி முதல்வர் “முனைவர்” S.M.அப்துல் காதர், துணைமுதல்வர் “முனைவர்” சேனட் ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சவுந்தர மகாதேவன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் M.K.M.முகம்மது நாசர், பொறியாளர் L.K.M.A.முகம்மது நவாப் உசேன் உட்பட பேராசிரியபெருமக்கள் மற்றும் மாணவக்கண்மணிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்