கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரிக்கை!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..

வாக்குபதிவு இயந்திர அறையில்
8,637 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3449 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 3990 விவிபேட் இயந்திரங்களும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வுசெய்ததில் அனைத்தும் சரியாக உள்ளது.

பொது இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டு 90% கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய பத்து சதவீதம் கொடிக்கம்பங்களை அகற்றஅறிவுறுத்தப்பட்டு கூடிய விரைவில் முழுவதுமாக அகற்றப்படும்.

Bismi

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படஉள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் 389 கிலோமீட்டர் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது, இது மட்டுமன்றி சி மற்றும் டி வாய்க்கால்கள் 100 நாள் வேலைவாய்ப்புதிட்டத்தின்கீழ் மற்றும் வேளாண் பொறியியல்துறை மூலமாகவும் தூர்வாருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

துணைவகை ஒமிக்ரான் கொரோனா தற்போது அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும், தற்போதைய கொரோனா குறித்து அச்சம் தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருப்பது அவசியம், அதிகம் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என்றார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போஸ்டர் ஓட்டுவதற்கு என பிரத்தியேக இடங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதைமீறி பொது இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அதை அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆங்கில பெயர்பலகைகளையக்அகற்றுவது தொடர்பாக வணிகர்களை அழைத்து கூட்டம் போடப்பட்டு தமிழில் வைக்கக்கூடிய பெயர் ஆங்கிலத்தைக் காட்டிலும் பெரிதாக இருக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டதுடன் 15 நாள் நோட்டீஸ் பீரியட் வழங்கப்பட்டது, பல கடைகள் அதனை அகற்றியுள்ளனர், அவ்வாறு பெயர் பலகை அகற்றப்படாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, தற்போது கூடுதலாக 10 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி அவர்கள் எடுக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்