திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் தற்காப்பு கலை கூடம் சார்பில் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி, திருச்சி உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு பள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளரும், புதுகை ஆயக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எழில்மாறன் செல்வேந்திரன், 9 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகலட்சுமி நம்பி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.


இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர். தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்புப் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசான 12,000 ரூபாய் ரொக்க பரிசை சிலம்ப ஆசான் குமரேசன் வழங்கினார்.





Comments are closed.