எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி பேராசிரியர் உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் இடம் பெற்றார் – ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியீடு

எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி பேராசிரியர் உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் இடம் பெற்றார் – ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியீடு

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 23, 2025  எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கே.சக்திபாண்டி அவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்செவியர் இணைந்து வெளியிட்ட உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Bismi

இந்தச் சிறப்பான சாதனையை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் டாக்டர் சக்திபாண்டி அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, உலகளாவிய தாக்கத்தையும் கல்வி பங்களிப்புகளையும் பிரதிபலிக்கும் இவரது பெயர் இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பது, அவரது தொடர்ந்த ஆராய்ச்சி பங்களிப்புத் திறமைக்கும் குறிப்பிடத்தக்க சான்றாகும்.

இவருடைய ஆக்கங்கள் இயற்பியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியதோடு, மனித நலம், தூய்மையான குடிநீர், சுத்தமான மற்றும் மலிவு ஆற்றல், பொருளாதார வளர்ச்சி மற்றும் பொறுப்பான உற்பத்தி மற்றும் பயன்பாடு போன்ற ஐ.நா. வின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கும் (SDGs) டாக்டர் சக்திபாண்டி அவர்கள் சிறப்பு பங்களிப்பு ஆற்றியுள்ளார்.

 

 

 

 

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்