தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டதின் தலைவர்களின் உரை.

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டதின் தலைவர்களின் உரை.

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைவர் விஜய், பொது செயலாளர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைவர்கள் பேசியவை.

தலைமை நிலைய பொதுச்செயலாளர் என்.ஆனந்த் : ஒரே கொள்கைக்காக, ஒரே லட்சியத்துக்காக இணைந்த கூட்டம்தான் தமிழக வெற்றிக் கழகம். இன்றைய அரசியலின் மையப்புள்ளி நமது தலைவர் தளபதிதான். 30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும், மக்களோடும், எங்கள் வீட்டு பிள்ளையாக மாறியிருக்கிறார் தளபதி. அவருடைய தியாகம் மிகப் பெரியது. யாரும் இவரை எளிதாக அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இவர் தமிழ் மக்களின், மண்ணின் நம்பிக்கை. இந்தக் கட்சி தொண்டர்களின் தியாகத்தால் கட்டப்பட்ட இரும்புக் கோட்டை. இனி தலைவர் கைகாட்டும் வழியில் புதிய வேகத்துடன் நாம் செயல்படப் போகிறோம். நம் மக்கள் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை கொடுக்கக்கூடிய தகுதியை கொண்ட ஒரே கட்சி தவெக மட்டும்தான். இனி ஒரு நொடி கூட நமக்கு ஓய்வில்லை. ஒவ்வொரு வீதிக்கும் சென்று ஆளும் அதிகாரத்தில் இருப்போரின் அவலங்களை எடுத்துரைக்க வேண்டும். நம் தலைவரை 2026இல் முதலமைச்சராக அமர வைப்பதற்கு நாம் சபதம் ஏற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு நம்மை வரவேற்கிறது.

கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்: செப்டம்பர் 27,2025 நமது துக்க நாள். 41 சொந்தங்களை இழந்திருக்கிறோம். எவ்வளவு தேற்றினாலும் அந்த இழப்பை நாம் ஈடு செய்ய முடியாது. இருப்பினும், குடும்பத்தில் ஒருவனாக இருந்து உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என்று தலைவர் சொன்ன வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

கரூர் நிகழ்வுக்குப் பிறகு எவ்வளவோ சவால்கள், எவ்வளவோ தடைகள். பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து தவெகவை முடக்க பலர் முயற்சிகள் செய்தார்கள். முடக்க இது பணத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. கரூர் நிகழ்வை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது.

2026இல் தலைவர் தலைமையில் நேர்மையான நல்லாட்சி அமைவதே உயிரிழந்தவர்களுக்கு செய்யப்படும் அஞ்சலியாக கருதுகிறேன். அதனை உறுதியாக செய்வோம். நான் சுற்றுப்பயணம் சென்றபோது, மக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருப்பதை அறிந்து கொண்டேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எத்தனை பாலியல் வன்கொடுமைகள், எத்தனை லாக்-அப் மரணங்கள். இது காவல்துறையில் உள்ள நிர்வாக சீர்கேட்டின் வெளிப்பாடு. காவல்துறைக்கு ரெகுலர் டிஜிபி நியமிக்கப்படவில்லை. இதை கூட செய்யாமல் முதல்வருக்கு வேறு என்ன வேலை? ஒரு சிலரை டிஜிபி பதவியில் அமர்த்த திட்டமிட்டு இது செய்யப்படுகிறது.

ஒரு குற்றம் நடந்தால், அதனை தீர விசாரித்து, ஆதாரங்களை கொண்டு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு பயம் வரும். ஆனால், அரசியல் பரபரப்புக்காக என்கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன. அவை உண்மையான நீதி கிடையாது. உண்மையில் அது உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விடவே வழி செய்யும்.

மற்றொரு காரணம், காவல்துறையில் உள்ள பணிச்சுமை. அவர்களுக்கு விடுமுறை இல்லை. ரோந்து போக ஆட்கள் இல்லை. இவை அனைத்தும்தான் குற்றங்கள் நடக்க காரணங்களாக உள்ளது. ஆனால், இவற்றை சரி செய்ய நேரமில்லாத முதல்வர் சினிமா மட்டும் பார்க்க நேரம் இருக்கிறது.

எந்த ஆட்சியிலும் இல்லாத ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதன் லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு கே.என்.நேரு துறையில் நடைபெற்ற தேர்வாணைய ஊழல். காண்ட்ராக்ட்ல அடிச்சது பத்தாதுனு இதுல கூடவா ஊழல். அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன மாதிரி, ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க, ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க அண்ணே. எதுக்கு படிக்கும் இளைஞர்கள் வாழ்க்கைல விளையாடுறீங்க?

திமுகவினர் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்பவர்கள். டெண்டர் எடுக்க Site inspection certificate தேவை என்ற புதிய உத்தியை வைத்து அண்ணன் எ.வ.வேலு ஊழல் செய்து வருகிறார்.

அரசு கேபிள் துறையில் இருந்து பாலிமர், புதிய தலைமுறை சேனல்களை எந்த அடிப்படையில் முடக்கப்படுகிறது. நீங்கள் வேண்டுமென்றால் ஸ்டாலின் மாடல் ஆட்சினு சொல்லிக்கோங்க. திராவிட மாடல் ஆட்சினு சொல்லி தலைவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்.

இலவச திட்டங்களை தவிர திமுக அரசு வேறு ஏதாவது திட்டத்தை செயல்படுத்தியிருக்காங்களா? அரசு வரிப்பணத்தில் கொடுத்துவிட்டு, கொடுத்துட்டோம், கொடுத்துட்டோம்னு பெருமை பேசுறீங்களே. உங்களுக்கே அழகா இது? ஒரு அட்சி ஆயிரம் தரோம்னு சொல்றாங்க. மற்றொரு கட்சி 2000 தரோம்னு சொல்றாங்க. இதுக்கு என்னதான் முடிவு? இலவசங்கள் யாருக்கு தேவையோ, அதை கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால், இதை வைத்து அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு அச்சுற்றுத்தலாக இருக்கும். இதற்காக ஒரு ஆணையம் அமைத்து முடிவு செய்யலாம்.

திமுகவின் கொடுமை ஒருபுறம், பாசிஸ பாஜகவின் கொடுமை மற்றொரு புறம். சிபிஐ, தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை கொலை செய்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு SIR கொண்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு பணமதிப்பிழப்பு, UCC போன்றவற்றை கொண்டுவந்து மக்களை சிந்திக்க விடாமல், கொதிநிலையிலேயே வைத்திருப்பது பாஜக, RSSஇன் திட்டம்.

ஒரு தொகுதிக்கு 30 கோடி, 40 கோடி கொடுத்து வெற்றி பெற்றால், நிச்சயமாக நல்லாட்சி அமையாது. மக்களே யோசியுங்கள். 1000 ரூபாயை தியாகம் செய்யுங்கள். 2026இல் நிச்சயம் தளபதி தலைமையில் நல்லாட்சி அமையும்.

தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா: கரூர் துயரம் நடந்து முதல் 16 நாள் அவதூறுகள், பொய் பிரச்சாரங்கள், துரோகங்கள். சூழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத நமது கட்சி. இன்று சூழ்ச்சி என்றால் என்னவென்று முதல் முறையாக கரூரில் பார்த்து, அதனை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தில் பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக, இன்று பொய்யை மட்டும் தலைவர் மீது பரப்பி இருக்கிறது. ஆனால், அமைதியின் மூலம், மௌன புரட்சியை உருவாக்கி இருக்கிறார் தலைவர். 2026இல் இந்த சூழ்ச்சியை அவர் தூக்கியெறிவார்.

சிறப்பு பொதுக்குழு என்று தலைவர் நம்மை அழைத்திருக்கிறார். எப்போதும் தலைவர் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர்தான் கூப்பிடுவார். இன்று தலைவரே அழைத்திருக்கிறார். பொதுச்செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார் என்கிறார்கள். யார் ஓடினார்? கலைஞர் கைதின்போது நீங்கள் ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள். உங்களது சூழ்ச்சிகளை சுப்ரீம் கோர்ட் வரை சென்று தூக்கியெறிய எங்களுக்கு தெரியும்.

அப்படி என்ன பண்ணிட்டோம்? கட்சி தொடங்கி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்கிறார். இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற நடிகர் சம்பளத்தை விட்டு விட்டு, அரசியலுக்கு வந்தார். கட்சி தொடங்க வேண்டும், மக்களிடம் செல்ல வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தளபதி. திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை செய்ததற்காக பாவ மன்னிப்பு கேட்டுக்கறேன். ஏனென்றால் எதிர்க்கட்சியாக இருந்தபோது, நல்லவங்களா தெரிஞ்சாங்க. ஏன் தலைவர் கூட, கறுப்பு சிவப்பு சைக்கிளில் வந்து ஆதரவு கொடுத்தாரே. இப்படியா செய்வீங்க? நன்றியில்ல?

திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு தலைவர் சென்றபோது 6 மணி நேரம் ஊரே முடங்கியது. இதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு இப்படிதான் நடந்ததுனு சொல்றாங்க. பெரம்பலூர் செல்ல முடியவில்லை என்று கலங்கிய கண்ணோடு புறப்பட்டவர் தலைவர். நாகப்பட்டினத்திலும் தலைவர் சொன்னார், “எங்களை நம்பி வரும் மக்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு”. அதன்பின், கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர்க்கு சென்று 50 ஆண்டுகால வரலாறை உடைத்தார் தலைவர்.

மக்கள் எங்கள் தலைவரை பார்க்க வரவில்லை. அன்பு கொண்டு வருகிறார்கள் மக்கள். நிர்வாகிகள் எவ்வளவு பேர் வருவார்கள் என்று மட்டும்தான் நாங்கள் சொல்ல முடியும். மக்கள் எவ்வளவு வருவார்கள் என்று எங்களால் எப்படி சொல்ல முடியும்? இதனை உங்களால் கணிக்க முடியவில்லை என்றால் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டு போங்கள். இதை கணிக்காமல் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.

கரூரில் செந்தில் பாலாஜி ரவுடினு சொல்றாங்க. கொஞ்ச நாள் பொறுங்க. யாரு ரவுடி என்று தெரியும் உங்களுக்கு.

Bismi

கோவைல பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண் ஏன் அங்க போச்சுனு திமுக கேட்டுட்டு இருக்கு. அசிங்கமா இல்ல? பெண்ணும் ஆணும் எங்க வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரம் தலைவர் வந்த பிறகு மாறும்.

கரூர் விவகாரத்தை 2 நாளில் கடந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். என் குடும்பத்தில் ஒன்று நடந்தால் நான் 30 நாள் வீட்டில்தான் இருப்பேன்.

வேறு எங்கயுமே இல்லாத வரவேற்பு கரூரில் இருந்துச்சி. காவல்துறை மேல எங்களுக்கு நம்பிக்கை இல்லனா, சூழ்ச்சியே தெரியாத எங்கள் தலைவர் காவல்துறைக்கு நன்றி சொல்வாரா? எங்களுக்கு சூழ்ச்சி தெரியல. நான் ஒத்துக்கறேன். அது எங்களுக்கு வேண்டாம். நாங்க உண்மையாவே இருந்துட்டு போறோம். நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வந்திருக்கோம்.

கரூரில் தவெக மீது அன்று இரவு மிகப்பெரிய லத்தி சார்ஜ் நடந்தது. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? நாங்கள் உள்ளே போகலாம் என்றால் அனுமதி இல்லை. கரூர் மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் இல்லை. ஆனால், தலைவர் ஓடிவிட்டார் என்று பேசுகிறார்கள். யாருடா ஓடுனது? தலைவர் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா? இதேபோலதான் ஜெயலலிதாவை கைது செய்துவிட்டு, அரசியலை விட்டே போயிடு மா என்றார்கள்.

எங்கள் தலைவர் நினைத்திருந்தால் ரெட் ஜெயிண்ட் கிட்டயே 500 கோடி சம்பளம் வாங்கி படம் நடித்திருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் உங்களை தூக்கி எறியத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

கரூர் சம்பவம் நடந்து 48 மணி நேரங்களுக்கு எங்களுக்கு எதுவுமே புரியல. என்ன பண்றதுனே தெரியாம நிக்குறோம். அப்போ தலைவருடைய மனசு எப்படி இருக்கும்? ஆனால், முரசொலில 41 பேரை கொன்ற விஜய்னு செய்தி எழுதுறாங்க. அப்ப இவங்க நோக்கம் என்ன?

இவர்களை யார் எதிர்கொண்டாலும் சூழ்ச்சியால் அடிக்குறாங்க. எம்ஜியார், ஜெயலலிதாவிடம் இப்படித்தான் செய்தார்கள். உதயநிதி வந்தார் துபாயில் இருந்து. என்னமோ மக்கள் நலனுக்காக துபாய் போன மாதிரி. அதன் பிறகு செய்தியாளர்கள் கிட்ட பேசுறார். தப்பு பண்ண விஜய் கிட்ட ஏன் கேள்வி கேட்கலனு. இவ்வளவுதான் இவங்க சிந்தனை. மக்கள் கூட்டம் கூட்டமா வராங்களே, என்ன பண்றதுனு அவங்களுக்கு புரியல.

5 வருஷத்துக்கு முன்னாடி மாற்றம்னு சொன்னவங்க எல்லாம், இன்னைக்கு அவங்க பக்கம் போயிட்டாங்க. ரெட் ஜெயிண்ட்ல படத்துக்கு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க.

கரூர் சூழ்ச்சியை கொண்டு நம்ம கட்சியை அழிக்கும் முயற்சியை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இவங்களே விசாரணை கமிஷன் போடுவாங்களாம். இவங்களே விசாரிப்பாங்களாம். எப்படி நியாயம் கிடைக்கும். அப்போதான் தலைவர் சுப்ரீம் கோர்ட் போக சொன்னார். முதலில் நம்பிக்கை கொடுத்தது அவர்தான். எங்கள் தலைவர் அதிகம் பேச மாட்டார். அவருக்கு தெரிந்தது எல்லாம் செயல்.

ஏன் கரூருக்கு தலைவர் போகலனு நிறைய கேள்வி. 8 நாள்களுக்கு முன்னாடியே காவல்துறை கிட்ட மனு கொடுத்தோம். கரூர் டி.எஸ்.பி எங்களுடன் சண்டை போடுறார். நாம கேட்ட இடம் ரவுண்டானா. இது ஏற்கெனவே காவல்துறை அனுமதி கொடுக்கும் இடம்தான். ஆனால் ஊருக்குள்ள கூட்டிட்டு வராத என்று மேல இருந்து உத்தரவு வந்துவிட்டது. அதனால மாத்திட்டாங்க.

நாமக்கல்லி இருந்து கரூர் வழியில ஒவ்வொரு 5 கிமீ தூரத்திலயும் 5000, 10000 பேர் வராங்க. நாங்கள் கூட்டிட்டு வரல. ஆனால், ஒரு போலீஸ் கூட இல்ல. மக்களுக்கு பாதுகாப்பு இல்ல. மக்களுக்கு ஏதாவது ஆச்சுனா, அந்தப் பழியை தலைவர் மேல போட்டு கட்சியை தூக்கி எறியனும்னு எண்ணம்தான். தன்னுடைய மகனுக்கு போட்டியே இல்லாம இருக்கனும்னு ஒரே எண்ணம்தான் முதல்வருக்கு.

ஒவ்வொரு சனிக்கிழமையும் புதிய தலைமுறைல 80 லட்சம் பேர் தலைவரை பார்க்கிறார்கள். அதனால முடக்கிட்டாங்க. தைரியம் இருந்தா கை வைங்க எங்கள் தலைவர் மேல. ஒட்டு மொத்த காலேஜ் இளைஞர்களும் உங்களுக்கு எதிரா வருவாங்க. இளைஞர் புரட்சி. நாமக்கல் கிட்ட குமாரசாமி காலேஜ்ல இருந்து 5000 பேர் தலைவரை பார்க்க ஓடிவந்தனர். அதுல 3000 பேர் மாணவிகள். இதுதான் அரசியல் மாற்றம்.

எங்களுக்கு எந்த பயமும் இல்லை. மக்கள் பாதுகாப்புக்கு காவல்துறைதான் பொறுப்பு. எங்கள் மீது கை வைத்தால் சுப்ரீம் கோர்ட்ல இருந்து ஆர்டர் வரும். எங்களுக்கும் தெரியும் அரசியல்.

அண்ணாவோட கொள்கை என்ன? எல்லாரும் சமம். அதையேதான் எங்கள் தலைவரும் சொல்றார். ஜாதி பார்த்து அரசியல் பண்ணல, மதம் பார்த்து அரசியல் பண்ணல என்ற கொள்கைவாதிதான் எங்கள் தலைவர்.

தலைவருக்கு கலைஞரை பிடிக்கும். ஆனால், இப்போ இருக்கற ஸ்டாலின் திமுக மோசம். அவரால் நடக்க முடியவில்லை பாவம். 5 வருஷமா எங்கயுமே போகாத ஸ்டாலின், கரூருக்கு நைட்டோட நைட்டா கிளம்பி வர்றாரு. எப்படி? சிபிஐ வரட்டும். பார்ப்போம்.

இன்றைய ஸ்டாலின் சார் திமுகவை இயக்குவது மகனும், மருமகனும். எங்களுக்கு ரவுடி அரசியல் தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. ஆனால், கரூர் மக்கள் குறித்த உணர்வு எங்களுக்கு இருக்கு. வேலுச்சாமிபுரத்துக்குதான் வரனும்னு சொல்லி மிரட்டி, கெஞ்சி போலீஸ் கையெழுத்து வாங்குனாங்க.

எந்த இறப்பாக இருந்தாலும் டிஎஸ்பி, எஸ்பி சஸ்பெண்ட் பண்ணுவாங்க. கரூர்ல ஏன் பண்ணல? கரூர்ல ஊருக்கு வெளியே சுவரே இல்லாத மண்டபத்தை கொடுத்தார்கள். தலைவருக்கு விமர்சனங்களுக்கு பதில் சொல்லி பழக்கம் இல்ல. ஆனால், கரூர் மக்களுக்கு இதையெல்லாம் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

கரூர் மக்களை பார்த்துவிட்டு தலைவர் 10 மணி நேரம் சாப்பிடவில்லை. ஒரு மிகப்பெரிய ஆளுமை மக்கள் முன்னாடி அழுது, கண்ணீர் சிந்தி நின்று கொண்டிருந்தார். ஆனால், ஒரு போட்டோ கூட வெளியே வரவில்லை. இதுதான் எங்களது அரசியல். உங்களை மாதிரி 7ஆவது நாள் இட்லி கடை படம் பார்த்த தலைவர் இல்லை எங்கள் தலைவர்.

அப்போதே அனைத்து குடும்பத்தையும் அவர் தத்தெடுத்தார். இப்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டார். பொதுவா புயலுக்கு பின் அமைதி வரும்னு சொல்லுவாங்க. இப்ப அமைதிக்கு பின் புயல் வரப் போகுது.

நாம ஏற்கெனவே 26% ஓட்டு எண்ணிக்கையை கடந்துட்டோம். நாம தனியாவே நின்னு ஜெயிக்க போறோம். திமுக என்ற தீயை சக்தியை அழிக்க எம்ஜியார் உருவானார். அதன்பின் ஜெயலலிதா வந்தார்கள். அதற்கு பிறகு நாங்கள்தான். அதில் தெளிவாக இருக்கிறோம்.

2026இல் தனது மகனை முதல்வராக்குவது மட்டுமே ஸ்டாலினின் குறிக்கோள். வேறு எந்த கொள்கையும் கிடையாது. இந்த அரசியலை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரே தலைவர் விஜய்தான்.

தலைவருக்கு பதவி வெறி எல்லாம் இல்லை. விவசாயிகளின் உணர்வுடன் நிற்கிறோம். கூலிகளின் உணர்வுடன் இருக்கிறோம்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்