திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.5:-நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு, வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் மொத்தமுள்ள,45 ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பனர்கள் ஆகியோருடன், “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை, விரைந்து முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!”-என்று, கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன், மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, நிர்வாக பொறியாளர்கள் ராமலட்சுமி, கனகராஜ், ராதாபுரம் வட்டாட்சியர் மாரி செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளியூர் மனோகர், முருகன், ராதாபுரம் அலெக்ஸ், சாமுவேல் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.