வார தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.880 உயர்வு!
சென்னையில் இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது .

ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கம் கிராம், 11,270 ரூபாய்க்கும், சவரன், 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Comments are closed.