- Advertisement -

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி

- Advertisement -

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி

Bismi

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு,ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வினோத்குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்