திருச்சி விமான நிலையத்தில் ₹.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா்ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணியொருவரை சோதனை செய்ததில், அவா் தனது ஆடைகளுக்குள் மறைத்து ரூ.21.43 லட்சம் மதிப்பிலான 292 கிராம் எடையிலான தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்