சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு அமெரிக்கா பயணம் !

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு அமெரிக்கா பயணம் !

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார்கள்.

Bismi

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் தமிழர் திருநாளையொட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதனால் அதன் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் குரல்பதிவு ஆகியனவற்றில் தனது பங்கை முழுமையாக முடித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.பராசக்தி படத்துக்கு அடுத்து அவர் இரண்டு படங்களில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் இருக்கின்றன.‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இருவரும் அமெரிக்காவிலுள்ள நவீன தொழில்நுட்ப அரங்கம் செல்கிறார்கள் என்றும் அங்கு வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்ற மாற்றம் தொடர்பான சோதனைகள் செய்யப்படவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

வெங்கட்பிரபுவின் முந்தைய படமான ‘தி கோட்’ படத்துக்காக நாயகன் விஜய்யுடன், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்குச் சென்று அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் சோதனைப்படம் எடுத்தனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரபலமான லோலா விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவில் அது நடந்தது.உடல் முழுக்க ஸ்கேன் செய்வது மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வது என அந்நிறுவனம் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். இதனை வைத்து ஒரே கதாபாத்திரத்தினை பல்வேறு கதாபாத்திர வடிவமைப்புகளாக மாற்றலாம்.இப்போதும் சிவகார்த்திகேயனை வைத்து அம்மாதிரி ஒரு சோதனை நடத்தவிருக்கிறார்கள் .அந்த வேலைகளை முடித்துவிட்டு இருவரும் டிசம்பர் 14 அன்றுதான் சென்னை திரும்புகிறார்களாம்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்