ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?-அன்புமணி கேள்வி

ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?-அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும் என அன்புமணி கூறினார் .

Bismi

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி இன்று சென்னை எழும்பூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்க தி.மு.க. அரசு தொடர்ச்சியாக 3 பொய்களை சொல்லி வருகிறது.சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்.தமிழகம் நடத்தினாலும் கோர்ட் தள்ளுபடி செய்து விடும்.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தி.மு.க அரசு கூறி வருகிறது.தமிழ்நாடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தி.மு.க. அரசு சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டது.சாதியின் பெயரால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு சமூகநீதி கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி பிரச்சனை கிடையாது. சமூகநீதி பிரச்சனை. 1931-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 28 கோடி. தற்போதைய மக்கள்தொகை 146 கோடி. இன்றைக்கும் ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா? தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிதாக நடத்திவிட முடியும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது. தி.மு.க.வின் பொய்கள் இனியும் எடுபடாது. இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு அன்புமணி கூறினார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்