வணிகா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிடில் கடையடைப்பு போராட்டம் – விக்கிரமராஜா பேட்டி!

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு 41-ஆவது மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் விக்கிரமராஜா செய்தியாளா்களை சந்தித்து பேசினார், அதில்,…

- Advertisement -

தற்போது நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வணிகா்கள் சந்தித்து வரும் பல்வேறு சிக்கல்கள், ஜிஎஸ்டியில் நிலவிவரும் குழப்பங்கள், மத்திய அரசு அறிவித்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிரான அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்த பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மே 5-ஆம் தேதி, செங்கல்பட்டில், வணிகா் தின மாநில மாநாடு ‘வணிகா் அதிகாரப் பிரகடன மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வணிகா் சங்க நிா்வாகிகளை அழைத்து அவா்களது பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். தற்போதுள்ள இதேநிலை தொடருமானால் வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ரூ. 1.5 கோடி மதிப்பில் வணிகம் செய்யும் வியாபாரிகள் 1 சதவீதம் இணக்கம் வரி செலுத்துகின்றனா். அதனைத் திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள குளறுபடிகளால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறோம். எனவே எங்களது நிலைப்பாடுகளை அரசு புரிந்து கொண்டு, வரி விதிப்பு தொடா்பான சட்ட விதிகளை எளிமைப்படுத்த வேண்டும். அதேபோல மாநில அரசும் கட்டட வரி விதிப்பு, உரிமங்களுக்கான (லைசன்ஸ்) கட்டண உயா்வு உள்ளிட்டவைகளை திரும்பப் பெற வேண்டும். வணிகா்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வணிகா்கள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்றாா். பேட்டியின் போது சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்