நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி-ரஜினிகாந்த்

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்.

நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி-ரஜினிகாந்த்

மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார்.

Bismi

மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான நடிகர் ஸ்ரீனிவாசன் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69.கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உதயம்பேரூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்றார்.டயாலிசிஸ் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்த படி இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து திரிபுனித்துராவில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை 8.30 மணியளவில் மரணம் அடைந்தார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே உள்ள பாட்டியம் பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்த ஸ்ரீனிவாசன், 1977-ம் ஆண்டு “மணி முழக்கம்” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தார். பள்ளி ஆசிரியர் மற்றும் இல்லத்தரசியின் மகனான இவர் பொருளாதாரம் இளங்கலை பட்டதாரி ஆவார்.சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் முறையான திரைப்பட பயிற்சி பெற்றவர். அவர் நடித்த முதல் படத்திலேயே தனது தனிப்பட்ட நடிப்பின் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

அவரது மறைவு மலையாள திரையுலகினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், “எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர்.அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்