எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்?த.வெ.க உடன் கைகோர்ப்பது உறுதியா!-பரபரப்பான அரசியல் களம்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்?.வெ. உடன் கைகோர்ப்பது உறுதியா!-பரபரப்பா அரசியல் களம்

Bismi

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸ், சசிகலாவின் நெருக்கடியால் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார்.இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையப் போவதாக கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இன்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் இன்று வழங்கினார்.அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ”இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,” என்று கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்