10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!

தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மூத்த திமுக முன்னோடிகள் 47 நபர்களுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்.

- Advertisement -

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை
மக்களுக்கு பயனுள்ள விதத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது BT Assistant 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்
தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக
3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான். இடைநிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நாங்கள்
அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும் .
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து
இரண்டு தலைவர்களும் பேசி, தங்களுடைய கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும்.
எனவே இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்