கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம்
அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி!
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி கட்டடம் கட்டுமானப் பணிகளுக்கு நல்லாட்சி நாயகர் – நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டிய நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இன்று கலந்து கொண்டேன். அப்போது, தமிழ்நாடு அரசு கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வரும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதைதைதொடர்ந்து,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட வளர்ச்சி திட்டப் பணிகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இன்று பார்வையிட்டோம். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் – சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் திரு. பி .கே .சேகர் பாபு , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியராஜன் தி.மு.க, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி,திரு. வெற்றியழகன், திரு. ஜோசப் சாமுவேல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் திரு. கோ.பிரகாஷ், இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் திரு. அ.சிவஞானம், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் முனைவர் ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் திரு. பா.கணேசன், இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் திரு. ப. ரங்கநாதன், மண்டல குழுத் தலைவர் திருமதி. சரிதா மகேஷ்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed.