இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு சசிகலா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு சசிகலா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான அய்யா திரு.R.நல்லகண்ணு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்.


அய்யா அவர்கள் இன்று நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவரது பெயரும், புகழும் இவ்வுலகில் என்றென்றும் நிலைத்திருக்கும். தமிழகத்தில் உள்ள அனைவருடைய உள்ளங்களிலும் அய்யா அவர்கள் நிறைந்து இருக்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரரான அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர்.
நேர்மைக்கு இலக்கணமான அய்யா அவர்கள் தன்னலமற்ற ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு அய்யா அவர்களின் பிறந்தநாளில் அவரோடு தொலைபேசியில் பேசியபோது, அய்யா அவர்கள் என்னை மனதார வாழ்த்தியது, இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது.
அய்யா நல்லகண்ணு அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்





Comments are closed.