புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு
புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போன்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த செயலி அனைத்து புதிய தொலைபேசிகளிலும் இருக்க வேண்டும் எனவும் பழைய மொபைல் போன்களிலும் சாப்டவேர் அப்டேட் மூலமாக இந்த செயலி இடம் பெற வேண்டும் எனவும் அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மொபைல் போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்சார் சாத்தி செயலி என்பது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் பாதுகாப்பு செயலி ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த செயலி தொடங்கப்பட்டது. தொலைந்துபோன அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சஞ்சார் சாத்தி செயலி மூலம் பெறலாம். அதே சமயம் சஞ்சார் சாத்தி செயலி நமது தொலைபேசியிலிருந்து நிறைய தரவை கோரக்கூடும். இதில் அழைப்பு பதிவுகள், மெசேஜ்கள், கேமரா மூலம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதற்கான அணுகல் ஆகியவை அடங்கும் என்பது பொதுமக்களுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.


Comments are closed.