சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில் திருக்கோயில் நிதி மூலம் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம் அனைத்து பணிகளும் முடிவுற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
அருகில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், லால்குடி கோட்டாச்சியர் வைத்தியநாதன், துணை ஆட்சியர் ஐஸ்வர்யா (பெறுப்பு) ,வட்டாட்சியர் அருள் ஜோதி, மண்டல இணை ஆணையர் செல்வராஜ் ,கோயில் இணை ஆணையர் கல்யாணி, செயற்பொறியாளர் பெரியசாமி, சா. கண்ணனூர் பேரூராட்சி தலைவர் ஜி பி சரவணன், மற்றும் மணியக்காரர் பழனிவேல், கண்காணிப்பாளர் ஸ்டாலின் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரிசை வளாக சிறப்பம்சம்:
கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள் நான்கு, காத்திருக்கும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், திருக்கோவில் பயன்பாட்டிற்காக எட்டு கடைகள் தேங்காய் பழ கடை ,வெள்ளி உருவ விற்பனை நிலையம் ,குங்கும விற்பனை நிலையம் ,பிரசாத விற்பனை நிலையம் ,கட்டணச் சீட்டு விற்பனை மையம், புத்தக விற்பனை நிலையம், எஸ் எஸ் தடுப்புகள், கண் கவர் மின்விளக்குகள், மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 12 கழிவறைகள் ஆகியவற்றை அமைக்கப்பட்டுள்ளன, பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள் அமைக்கப்பட்டுள்ளது, வரிசை வளாகத்திற்கு வெளியே பொருட்கள் பாதுகாப்பு , ஓட்டுநர் ஓய்வு அறைகள் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, உணவகம், காலனி பாதுகாப்பு மையம்,ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற பூஜை பொருட்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள், விற்பனை செய்ய கடைகள் 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.