300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.
300 ஆடுகள், 150 கோழி வெட்டி 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட சமபந்தி அன்னதானம்.

காலை தொடங்கி இரவு வரை குறையாத விறுவிறுப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சமபந்தி அன்னதானம் நடைபெறும். மக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறி விட்டாலோ அல்லது வேண்டுதலுக்காகவோ ஆடு, மாடு, கோழி மற்றும் உணவிற்கு தேவையான பொருட்களை நேற்றிக்கடனாக வழங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டும் பொதுமக்கள் வழங்கிய பொருட்கள் மற்றும் ஆடு, கோழிகளை வைத்து சமையல் பணியை தொடங்கினர். 300 ஆடுகள், சுமார் 150 கோழிகள், 750 கிலோ தக்காளி, 750 கிலோ வெங்காயம் என அசைவ விருந்து 10 ஆயிரம் பேருக்கு வழங்கிடும் பணிகள் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை சமையல் வேலை நடைபெற்று முடிந்த பின் சிறப்பு திருப்பலி நடைபெற்றதை அடுத்து அனைவருக்கும் உணவு வழங்கும் பணி தொடங்கியது. ஆலயம் முன்பு சேர் – டேபிள் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் மாலை முதல் இரவு வரை அசைவ உணவை சாப்பிட்டு சென்றனர். காலை முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சமபந்தி நிகழ்ச்சிக்கான பணிகளை செய்திருந்த நிலையில் மஞ்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டுச் சென்றனர். விவசாயம் செழித்திட வேண்டும், மக்கள் நோய்நொடி இன்றி வாழ்ந்திட வேண்டும், அமைதி நிலவ வேண்டும் இப்படியாக பல்வேறு பிராத்தனைகளும் நடைபெற்றது.


Comments are closed.