அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!

அணுஉலை எதிர்ப்புக்குழு வழக்கறிஞர் செம்மணி நினைவு தினத்தில் புகழ் அஞ்சலி செலுத்திய புரட்சி பாரதம் கட்சியினர்!

திருநெல்வேலி,டிசம்பர் 3:-

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “மாறன்குளம்” பகுதியில், கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு வழக்கறிஞரும்,தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின், திருநெல்வேலி மாவட்ட தலைவருமான, “வழக்கறிஞர்”

Bismi

செ. இராச ரெத்தினம் செம்மணியின் 5-ஆம் ஆண்டு “நினைவு” தினம், நேற்று

( டிசம்பர்.3) காலை கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள அவரது நினைவிடத்தில்,”புரட்சி பாரதம்” கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் தலைமையில், செம்மணியின் திருவுருவப்படத்திற்கு, “மலர்” தூவியும், “மலர் மாலை” அணிவித்தும், “புகழ் அஞ்சலி” செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், புரட்சி பாரதம் கட்சியின், திருநெலவேலி மாவட்ட பொருளாளர் முகம்மது காஸீர்,வள்ளியூர் ஒன்றிய செயலாளர் மிக்கேல் ராஜ் மற்றும் “வழக்கறிஞர்” செம்மணியின் குடும்பத்தினர் உட்பட பலரும், கலந்து கொண்டனர். அஞ்சலி நிகழ்ச்சியின் முடிவில், “மக்கள் தமிழகம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கபிலன், அனைவருக்கும் நன்றி கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்