- Advertisement -

திருச்சி இறகுகள் முதியோர் இல்லத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

- Advertisement -

திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள இறகுகள் முதியோர் இல்லத்தில் நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் மரியா மெர்சி கலந்து கொண்டு, குடியரசு தின வரலாற்றை மிகச் சிறப்பாகவும், துல்லியமாகவும் முதியவர்களுக்கும், மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார்.

முன்னதாக இறகுகள் அறக்கட்டளை நிறுவனர் மரியா மெர்சிக்கு திருச்சி கோபால் தாஸ் ஜுவல்லரி சார்பாக சிறந்த சமூக சேவகருக்கான கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இறகுகள் அகாடமி மாணவர்கள், நிறுவனர் மரியா மெர்சிக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Vagai

Bismi

தொடர்ந்து முதியோர் இல்லத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கற்பகம் மற்றும் BHEL நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் இக்பால் ஆகியோரிடம் மரியா மெர்சி தனது விருதை பெற்றுக் கொண்டார். சிறந்த சமூக சேவகருக்கான விருதை பெற்ற இறகுகள் அறக்கட்டளை நிறுவனர் மரியா மெர்சிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்