- Advertisement -

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருச்சியில் இருந்து அனுப்பி வைப்பு!

- Advertisement -

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். உணவு பொட்டலங்களை சாப்பிட்டு பார்த்தும், பாதுகாப்பாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அறிவுரைகளை வழங்கினார்.

Bismi

Vagai

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்

உணவுப் பொருட்கள் திருச்சியில் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மரங்களை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பத்தாயிரம் பைகளும் அனுப்பப்படுகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்