- Advertisement -

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது – வருமான வரித்துறையினர் விசாரணை!

- Advertisement -

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபஸ்டின், க்ரைம் ஆய்வாளர் ரமேஷ் குழுவினர் நேற்று இரவு 6 வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹவுராவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில் கருப்பு பையுடன் சந்தேகத்துக்கு இடமாக வந்த நபரின் உடைமைகளை சோதனை மேற்கொண்ட போது
அவரது பையில்
உரிய ஆவணங்கள் இல்லாமல்
கட்டுக்கட்டாக ரூபாய் 75 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது.

Bismi

Vagai

தொடர்ந்து அந்த பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வேதமாணிக்கம் என்பவரது மகன்
ஆரோக்கியதாஸ் (49) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கு ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். பின்னர்
வருவான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதாவிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து வருமானத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட
பணம் ₹.75 லட்சம் ஹவாலா பணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்