திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் ஒரு வாரமாக மழை நீர் வடியாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் – எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேச்சுவார்த்தை!

திருச்சியில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் திருச்சி காஜாமலை ஜேகே நகர் பகுதியில் மழை நீர் வடியாததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

- Advertisement -

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து மழை நீரை உடனடியாக அகற்றவும் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்.எல்.ஏவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொது மக்கள் மறியல் போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்