மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மனு
மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து தேவாலயம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மனு..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மணப்பாறை பகுதி பூமாலைப்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலைப்பட்டி பகுதியில் எங்கள் வீடு உள்ளது. அந்தப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த நாட்டாமை ராயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து நகராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமிப்பு செய்து எங்கள் வீட்டின் முன்பு புனித அந்தோனியார் கோவில் கட்டுவோம் உங்கள் வீட்டின் பாதையை அடைப்போம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள், எவனை வேண்டுமானாலும் கூப்பிடு, நாங்கள் இந்த ஊரில் மெஜாரிட்டியான சமூகம் அதனால் எங்களை எதுவும் செய்ய முடியாது என மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அரசு அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார். ஆகையால் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்த சாலையை ஆக்கிரமிப்பு செய்து கிறிஸ்துவ கோயில் கட்டுவதை தடுக்க வேண்டும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இந்த தவறுக்கு அப்பகுதி திமுக கவுன்சிலர் உடந்தையாக இருக்கிறார் ஆகையால் இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.



நகராட்சி சொந்தமான சாலையை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கே அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பேட்டி – கார்த்திகேயன் ((பொதுமக்கள்))





Comments are closed.