மெட்ரோ திட்டத்தை முடக்கியதாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!

மெட்ரோ திட்டத்தை முடக்கியதாக மத்தி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!

கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி சம பங்களிப்பு அடிப்படையில் மத்திய அரசின் நிதியுதவி வேண்டி, இத்திட்டங்களை ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்திட பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில் மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழகத்தின் முன்மொழிவுகளை மத்திய அரசு, நிராகரித்துள்ளது.கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.

Bismi

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். பாஜக.ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் அளித்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளப்பதியில், “கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? ” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மெட்ரோ திட்டத்தை முடக்கியதாக மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் – மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும் 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தளப்பதிவில், “ ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தளப்பதிவில், “மதுரையும், கோவையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரங்கள். இவை இரண்டும் இந்தியாவின் வேகமாக வளரும் Tier-II நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல; அவசியமான உள்கட்டமைப்புத் தேவை. மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது. ஒன்றிய பாஜக அரசின் பாகுபாட்டை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் நியாயமான உரிமைக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மதுரை & கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்