பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.

0

பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா நடைபெற்றது, முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும், அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.

- Advertisement -

இதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.

அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்: இதனையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பினர். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக திகழும் என பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படுவதால், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. நாடாளுமன்றக் கட்டிடம் எனும் இந்த சின்னம், அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும்; கனவுகளை காணச் செய்து அவற்றை நனவாக்கட்டும். இது நமது மகத்தான தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்