திருச்சி என்.ஐ.டியில் “ப்ரக்யான் -24 தொழில்நுட்ப விழா” – 13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்!

0

- Advertisement -

திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ப்ரக்யான் – 2024 எனும் தலைப்பில் தொழில்நுட்ப விழா வரும் 22 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து என்.ஐ.டி இயக்குநா் ஜி.அகிலா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

- Advertisement -

திருச்சி என்ஐடியில் தேசிய அளவில் ஆண்டுதோறும் மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்படும் ப்ரக்யான் தொழில்நுட்ப விழா பிப். 22- ஆம் தேதி தொடங்கி 25- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை எல் & டி ஏவுகணைகள் தொழில் பிரிவின் தலைவா் லக்ஷ்மேஷ் தொடக்கி வைக்கிறாா். இதில், மருத்துவத்தில் நோபல் பரிசு வென்ற ரிச்சா்ட் ராபா்ட், எப் ஃ பிஐ முன்னாள் ஏஜென்ட் ஸ்காட் ஆகன்ட்பவும், தொல்பொருள் ஆய்வாளா் அா்ஷ் அலி, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சேஷசாயி காந்தம்ராஜு உள்ளிட்டோா் பங்கேற்கும் பயிலரங்கம் நடைபெறுகிறது. நிறைவு விழாவில் சிஎஸ்ஐஆா் இயக்குநா் கலைச்செல்வி பங்கேற்கிறாா். ப்ரக்யான் தொழில்நுட்பக் கண்காட்சியில் பயோனிக் க்வாட்ரப்பிள் ரோபோட், மல்டி ஹூமனாய்டு ரோபோ ஷோ, சைகையால் கட்டுப்படுத்தப்படும் ட்ரோன், யுவி ட்ரோன், ரூமி ஹைப்ரீட் ராக்கெட்டுகள், செயற்கைகோள்களும், இஸ்ரோ மற்றும் ஆவடி படைக்கலத் தொழிற்சாலைப் பொருள்களும் காட்சிக்கு வைக்கப்படும்.

இதில், சிமோஸ் அனலாக் சா்க்யூட் டிசைன், செயற்கை நுண்ணறிவு, அப்ஸ்டாக்ஸ், லேட்டன்ட் வைபேஜ், ஆட்டோ டெஸ்க், ஹேக்கிங், சைபா் பாதுகாப்பு போன்ற பயிற்சி பட்டறைகளும், மேலாண்மை, குறியீட்டு முறை, ரோபாட்டிக்ஸ் பிரிவுகளில் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. ப்ரக்யான் விநாடி வினா, ஸ்டாா்ட்அப் அரினா, வாட்டா் ராக்கெட்டரி, பிஸ்ட் ஆப் காட், கேப்ச்சா் தி ‘ஃ’பிளாக் போன்ற நிகழ்வுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. போட்டிகளில், தேசிய மற்றும் சா்வதேச அளவில் 3 ஆயிரம் மாணவா்கள் நேரடியாகவும், இணையதளம் வழியாக சுமாா் 10ஆயிரம் மாணவா்களும் பங்கேற்க உள்ளனா். பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்