திருநெல்வேலியில், மாநகர காவல்துறை நடத்திய,மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரடியாக பங்கேற்று, மக்களிடமிருந்து, மனுக்களை பெற்ற, மாநகர காவல் ஆணையர்!
திருநெல்வேலியில், மாநகர காவல்துறை நடத்திய,மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரடியாக பங்கேற்று, மக்களிடமிருந்து, மனுக்களை பெற்ற, மாநகர காவல் ஆணையர்!


தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ( DGP) உத்தரவுப்படி மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், தமிழகமெங்கும் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று {ஜனவரி.21} காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, மொத்தம் 21 நபர்கள் வருகை தந்து, அவர்களது புகார் மனுக்களை, மாநகர காவல் ஆணையர் ‘முனைவர்’ நெ.மணிவண்ணனிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட, மாநர காவல் ஆணையர்,” “பெறப்பட்டுள்ள புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!”- என, மனுதாரர்களிடம் உறுதி அளித்தார்.
இம்முகாமில், மாநகர காவல் துணை ஆணையர்கள், மேற்கு மணடலம் டாக்டர் சி.மதன், கிழக்கு மண்டலம் வி. வினோத் சாந்தாராம் மற்றும் தலைமையிடம் எஸ். விஜயகுமார் ஆகியோரும், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.