முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பயணிகள் படுகாயம்
முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பயணிகள் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பைபாஸ் சாலையில் முதுகுளத்தூரில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து திருமயம் பைபாஸ் சாலையில் செல்லும்பொழுது டிரைவரின் கவனக்குறைவால் புதுக்கோட்டை சாலையில் செல்ல வேண்டிய பஸ் காரைக்குடி சாலையில் திரும்பியதால் அதே இடத்தில் பஸ் தடம் புரண்டது இதில் சென்னை சென்ற 37 பயணிகள் பயணம் சென்றனர், இந்த விபத்தில் ஐந்து நபர்கள் படு காயங்களுடன் புதுக்கோட்டை மெடிக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, பஸ் சாய்ந்து விட்டது என செய்தி கேட்ட சந்தைப்பேட்டை ஜமாத் இளைஞர்கள் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை உடனடியாக திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விவரம் அறிந்த அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வி கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்தனர் மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகள் அனைவரையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இச்சம்பவம் இரவு சுமார் பத்து மணி அளவில் நடைபெற்றதாக தெரிகிறது பஸ் ஓட்டுநர் படு காயங்களுடன் உயிர் தப்பினார் மேலும் இச்சம்பவம் பொதுமக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
மீதமுள்ள 32 பேருக்கு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்


Comments are closed.