ட்ரைலர் வரவேற்பைத் தொடர்ந்து தணிக்கை(U/A) சான்றிதழ் பெற்ற பராசக்தி!

ட்ரைலர் வரவேற்பைத் தொடர்ந்து தணிக்கை(U/A) சான்றிதழ் பெற்ற ‘பராசக்தி’!

Bismi

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், நேற்று முன்தினம் படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள்வசனங்கள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவரும் நிலையில் இன்று படம் குறித்த மற்றொருஅறிவிப்பு வெளியாகி உள்ளது.கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் ஒரு படமாக பராசக்தி இருக்கும் என்பது ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கின்றனர் . ஒரே நாளில் பராசக்தி திரைப்படத்தின் ட்ரைலர் நான்கு கோடி பார்வையாளர்களை பெற்று உள்ளதாகவும், 24 மணி நேரத்தில் அதிக மில்லியன் பார்வையாளர்களை பெற்ற தமிழ் படம் என்ற பெருமையை பராசக்தி ட்ரைலர் பெற்றிருக்கின்றதாம். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு பராசக்தி ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்