திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது
திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான
ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது
திருச்சிராப்பள்ளி,
தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு இணைந்து நடத்தும் 18வயதிற்கு மேற்பட்டோர்கான ஓவியம் மற்றும் சிற்பக்கலைப்பயிற்சி முகாம்
ஸ்ரீரங்கத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் இன்றும், நாளையும் நடக்கிறது.
பயிற்சி முகாமை திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர்(பொ) சி.நீலமேகன தமிழகத்தின் புகழ் வாய்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் மா.அய்யப்பா, மா.ராஜப்பா ஆகியோர் கலந்து கொண்டு மரபுபாணி ஓவியம், நவீனபாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்பம் ஆகியன குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கின்றனர்.
இரண்டாம் நாளான நாளை நடக்கும் பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் த.ஜெகதீஸ்வரி தலைமை வகித்து பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.
முன்னதாக திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர்(பொ) சி.நீலமேகன் வரவேற்கிறார். முடிவில் திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனலோச்சனி நன்றி கூறுகிறார்.